Friday, February 28, 2014

நமசிவாயமே!!!

அகமும் நீ
ஆக்கமும் நீ

இசையும் நீ
ஈர்ப்பும் நீ

உணவும் நீ
ஊக்கமும் நீ

எண்ணமும் நீ
ஏக்கமும் நீ

ஐயமும் நீ

ஒழுக்கமும் நீ
ஓய்வும் நீ

ஔசதம் நீ
அஃகும் நீ
அழகும் நீ

எழுத்தும் நீ
மனமும் நீ
மாற்றமும் நீ
நித்தம் நீ
நினைவும் நீ
குளிரும் நீ
நண்பனும் நீ
நானும் நீ
நமசிவாயமே !!! 

Wednesday, February 19, 2014

புது உலகம்...!!!

இரவும் பகலும்
கறுப்பாய்??? வெள்ளையாய்???
என்ன வண்ணத்தில்
எப்படித் தெரியும்
இவர்கள் செவித்திரையில் !!!

செவிகள் பார்க்க
விழி கள் விரிய
சிரிப்பு பிறந்து
இவர்கள் காணும்
கற்பனைப் பேழையின்
காட்சி வடிவில்
உலகம் தான்
எப்படி இருக்கும் ???

தன் வடிவம் எப்படி அறிவான்?
கடவுளின் தோற்றம் எப்படி?
காடுகளின் நிறம் என்ன?
குழந்தையின் அழகும் எப்படி இருக்கும்...???
நீளும் கேள்விகள்.... நிதர்சனம் அறிய....!!!