Saturday, April 29, 2023

மீன்

அண்ணாந்து பார்க்க
தெரியும் வானில்
நீந்த முடியாது
இதென்ன கடல் என
வியந்து தவித்து
திரும்பும் மீன்


வரிகள் தந்த வரிகள்... Thanks to 
*OTHER SEAS*

A fish said to another fish, “Above this sea of ours there is another sea, with creatures swimming in it – and they live there even as we live here.”

The fish replied, “Pure fancy! Pure fancy! When you know that everything that leaves our sea by even an inch, and stays out of it, dies. What proof have you of other lives in other seas?”

*The Forerunner, Kahlil Gibran*


- விருதுநகர்
29.04.2023

Saturday, April 22, 2023

மேஜைத் திரையரங்கம்

இச்சிறு திரை
வெள்ளித்திரை
ஆகிப் போக
தட்டச்சு பொத்தான்கள்
எல்லாம்
இருக்கைகள்
ஆனது என்
மேஜைத் திரையரங்கில்... 🎟️

விருதுநகர்
21.04.2023

Sunday, March 12, 2023

கார்த்திக் நேதா வரிகளில்.... கோவிந்த் வசந்தா இசையில்....ஜானு திரைப்படத்திலிருந்து...

Journey

நான் என்பது யாரோ

பெருந்திரளினிலே.. ஏடே நான் என்பதை வீசி எழுந்தேனே.. மனமே.. தான் என்பது போகும் பெருங்கணத்தினிலே.. கூவி வாவென்றொரு வாழ்க்கை சிறுகுரலாய் அருளாய்ப் பேச போகாதொரு ஆழம்தேடி நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன் வாழாதொரு வாழ்வைத் தீண்டித் தெளி தெளி தெளி தெளி தெளிவில் பூப்பேன் காணாதொரு வெளிச்சத்தில் எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன் வீழாதொரு நிலையினிலே அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன் ஆழ் என்பது மெய்ஞான போதம் இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும் போல் என்பது பகட்டு வாதமே இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும் நாள் என்பதும் பொய்யான காலம் இப்போதில் இப்போதில் இப்போதில் எல்லாமும் கேள் என்குதே தெளிந்த ஞானமே கேட்க கேட்க ஓசை மீறிக் கேட்கிறதே.. ஆறறிவென்றே அலட்டாமல் எளிதாய் நானும் ஓர்உயிர் என்றே இருப்பேனே குழம்பாமல் யார் உடைத்தாலும் சிரிக்கின்ற பொம்மைப்போலே நான் என் இயல்பில் இருப்பேன் ஓடும்நதியின் மேலே உட்காரும் தட்டான் போலே லேசாக அமர்ந்தே பறப்பேனே புவிமேலே தாய் தூங்கும் அழகைப் பார்த்துத் தான் தூங்கும் மழலைப்போலே பேரன்பைப் போலி செய்வேனே நிறுத்தாமல்.. பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன் இப்போது இப்போது இப்போது கண்ணாக பேருண்மையில் கலந்துபோகிறேன் இப்போது இப்போது இப்போது ஒன்றாக பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன் இப்போது இப்போது இப்போது நன்றாக பேராற்றலில் கரைந்துபோகிறேன் பூத பேத வாத மோகம் மறைகிறதே.. நான் எனக்குள்ளே அசைந்தேனே ஊஞ்சல்போலே யார் எனை அசைத்தே ரசித்தாரோ சலிக்காமல் பேரலை மேலே விளையாடும் காகம்போலே யார் எனைத் துணிவாய்ப் படைத்தார் சீறும் புலியைப் பார்த்தே சிரிக்கின்ற சிசுவைப் போலே கோபங்கள் மறந்தே சிரிப்பேனே பதறாமல் பூவிழும் குளத்தின் மேலே உருவாகும் வளையல் போலே நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே கதறாமல் வாகாய் வாகாய் வாழ்கிறேன் பாகாய் பாகாய் ஆகிறேன் தோதாய் தோதாய் போகிறேன் தூதாய் தூதாய் ஆகிறேன் போதாய் போதாய் பூக்கிறேன் காதாய் காதாய் கேட்கிறேன் தாலாட்டும் காலம் தலையாட்டும் ஞானம் தாய்ப்போல் பாடுதே ஆரோ ஆராரிரிரோ ஆரோ…


Sunday, January 15, 2023

பொன் என பொங்கும் பொங்கல்

ஒரு பொன்
கரும்பு ஒன்று
ஒரு பொன்
மொச்சை என்று
ஒரு பொன்
பனங்கிழங்கு
ஒரு பொன்
உதிரிப்பூ நூறு
இந்த பொங்கல்
சந்தை விலை போல்
நம் வளம் பெருகட்டும்...

4.30 என நம் காலம் கணிக்க
3.30க்கே வந்த தண்ணீர் போல
விடிவு காலங்கள் முன்கூட்டியே
பிறக்கட்டும்...

இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்... !!!

விருதுநகர்
15.01.2023