Friday, April 29, 2016

Coffee mug

Coffee mug ல்
இத(ய)மாய் பரிமாறல்...

Instant (இந்தக்) கவிதை...

29.4.2016

கடல்...நிலா...

அன்னார்ந்து பார்க்க தூண்டிய
அரை நிலவும்...
ஐந்து நொடிக்கு ஒரு முறை
வந்து கால் நனைத்த
கடல் அலையும்...
கற்றுக்கொடுத்தது
"இதுவும் கடந்து போகும்" என்று...
இன்பமும் துன்பமும்
மாறி மாறி வரும்..
இன்பத்தை ரசிப்போம்..
துன்பத்தை சகிப்போம்..

அரைமனதோடு திரும்பினேன்..
முதல் முறையாக கடலில்
குளிக்க ஆசை பட்டும்...

அன்னார்ந்து பார்த்தால்
கடல் அலையை ரசிக்க முடியவில்லை
குனிந்து கீழே பார்த்தால்
அரை நிலவை ரசிக்க முடியவில்லை
ஆழ்கடலுக்கு சென்றிருந்தால்
இரண்டையும் ரசித்திருக்கலாம்...
அரை நிலவின் பிம்பத்தை
கடலின் முகத்தில்..
:-)

-29.04.12

Monday, April 25, 2016

ஆக்டிவா தேவதைகள்

சுஜாதா இன்று
சாலையில் பயணித்திருந்தாள்
"ஆக்டிவா" தேவதை படைத்திருப்பார்...

இன்றென்ன தேவதைகள்
ஆக்டிவாவில் பயணிக்கிறது...😝

நிலவீர்ப்பு விசை

பூமியில் நிற்க‌
புவி ஈர்ப்பு விசை
என்றால் அதையும் மீறி
என்னை ஈர்த்து கொண்டிருக்கும்
உன் விசைக்கு என்ன பெயர்
சித்திரை நிலவே!!!

-25.04.2013

Sunday, April 24, 2016

வெப்பம் உனையும் வருட்டியதோ...!!!

(உன் கரையில் அமர்ந்திருக்க
சட்டென வந்து "அலை"த்துச் சென்றாய்
ஒருவனின் செருப்பை...)

உன்னோடு குழந்தைகள் குதூகளிக்க,
செருப்பை பத்திரபடுத்தி செல்போனை  நனைத்தே
பின் வந்தவன் உன்னில் தேடியது
வானில் நான் தேடிய நிலவைத்தானோ...???

காணவந்த போது காண வராதவனே!!!
வெப்பம் உனையும் வருட்டியதோ...!!!
வீடு திரும்பையில் உடனும் வந்தாய்
குளித்து விட்டு வானில் வந்து...!!!

- 24.4.2016

Wednesday, April 20, 2016

வைக்கோள்

காற்றை கிளித்து
பிடரி பறக்கும்
குதிரை முடியாய்
விரைந்து செல்லும்
லாரியில் பறக்கிறது
வைக்கோள் படைப்பு....!!!

20.04.2014