Friday, April 29, 2016

கடல்...நிலா...

அன்னார்ந்து பார்க்க தூண்டிய
அரை நிலவும்...
ஐந்து நொடிக்கு ஒரு முறை
வந்து கால் நனைத்த
கடல் அலையும்...
கற்றுக்கொடுத்தது
"இதுவும் கடந்து போகும்" என்று...
இன்பமும் துன்பமும்
மாறி மாறி வரும்..
இன்பத்தை ரசிப்போம்..
துன்பத்தை சகிப்போம்..

அரைமனதோடு திரும்பினேன்..
முதல் முறையாக கடலில்
குளிக்க ஆசை பட்டும்...

அன்னார்ந்து பார்த்தால்
கடல் அலையை ரசிக்க முடியவில்லை
குனிந்து கீழே பார்த்தால்
அரை நிலவை ரசிக்க முடியவில்லை
ஆழ்கடலுக்கு சென்றிருந்தால்
இரண்டையும் ரசித்திருக்கலாம்...
அரை நிலவின் பிம்பத்தை
கடலின் முகத்தில்..
:-)

-29.04.12

No comments:

Post a Comment