Friday, August 10, 2012

காரிய காரணம்


இதென்ன கூத்தா..
இது தான் கூற்றா..

வெட்பம் தனிந்த பூமி..
வெட்பம் தனித்த சூரியன்..

அசைந்து ஆடும் தீபம்...
அசைத்து ஆட்டும் தென்றல்...

வெட்கம் கூடிய பெண்மை...
வெட்கம் கூட்டிய ஆண்மை...

மோகம் கூடிய ஆண்மை
மோகம் கூட்டிய பெண்மை

விலை ஏறியது காய்கனி
விலை ஏற்றியது பெட்ரோல்

காரியம் இதுதான்
காரணம் இதுதான்

Sunday, August 5, 2012

உயிர் மெய்..

" ந"ட்பாய்
மெய்எழுத்தும்

"உ"றவாய்
உயிர் எழுத்தும்

ஒருசேர பிறக்கிறது
"வாழ்க்கை" எனும்
அர்த்தமுள்ள 
வார்த்தை..

வார்த்தை அமைய முன் நிற்பது "மெய்"
வாழ்க்கை அமைய முன் நிற்பது " நட்பு "

உறவு உயிர் ஊட்ட...
நட்பு மெய் சேர்க்கிறது...

வாழ்க்கை என்ற‌
வானத்தில்
நண்பன் என்ற‌
நட்சத்திரமாய்
என்றும் என்னை
அழகு செய் நண்பா...

என்றும் நமக்கு நண்பர்கள் தினம் தான்
இதில் இன்றென்ன தனி கொண்டாட்டம்... :-)

Friday, August 3, 2012

ஐம்புலன்களும் அசைந்தாட


மழைத்துளி இன்று
சிறுஉளியாய்
மரத்துப்போன
என் கவி
மனதை
செந்தமிழாய்
செதுக்கியது...

துளியின் ஓசையும்
உளியின் ஓசையும்
ஒன்றுதான் சற்று
கவனித்துக் கேட்டால்..

மண் வாசம் இன்று
மன வாசம் வீசச் செய்த‌து
மல்லிகையாய்..

கருமேகம் சூழ்ந்து
கண்களையும்
கவிபாடக்
கனிந்தது

மெய்யாய் தன்
வசைபாட‌
ஐம்புலன்களையும்
அசைந்தாடச் செய்து
வசம் செய்தது இந்த‌
சிறுமழை