Monday, October 29, 2012

"கடல் விளக்கம்" ஆகிறாய்..

கடற்கரை காற்றுடன்
அலைகளின் அகத்தினில்
உன்னை ஆயிர கணக்கில்
பிம்பங்களாய் கண்டேன்!!!
இதைப்பார்த்து தான்
"ஆயிரம் நிலவே வா " 
பாடினரோ????

கப்பலோட்டி ஒரு முறை
சிந்தித்தான் !!!
சுழன்று கொண்டு ஒரு
கலங்கரை விளக்கம் இருக்க
நிலையாய் ஒன்று புதிதாய்
தெரிகிறதே என்று !!!

கடலின் பக்கம் இருந்து கொண்டு
கரையில் இருப்பவர்களுக்கு
"கடல் விளக்கம்" ஆகிறாய்..!!!

Saturday, October 27, 2012

சரஸ்வதி பூஜை முடித்தோம்!!!

குருத்தோலை கட்டி
திருவிழா காணும்
கோவில் ஆனது
குடியிருக்கும் வீடுகள்!
தொழில் செய்யும் கூடங்கள்!!

தெருக்கள் தோறும்
திஷ்டி களித்த
பூசணிக் காய்கள்!
சிதரு தேங்காய்கள்!!

சாமந்திப்பூ சூடி
சுற்றித்திரிகிறது
புதிதாய் மிளிரும்
பழைய வாகனங்கள்!!

பட்டாடை உடுத்தி
உற்சாகமாய் மழலைகள்!
மங்களமாய் மங்கையர்கள்!!
ஆனந்தமாய் ஆடவர்கள்!!!

கற்பூரம்,விபூதி,மலர்
வாசம் சேர்த்து
சரஸ்வதி பூஜை
முடித்தோம்!!!

மழை பெய்து
மண்ணும் குளிர்ந்தது!!!

Friday, October 19, 2012

சில்லென ஒரு பயணம் .. நல்ல மழையில் !!!!

கண்ணாடி ஆகிப்போன 
சாலைகள்!!! வழுக்கிச்
செல்லும் வாகனங்கள்!!!

எல்லோரும் படத்தின் 
கதா நாயகனாகின்றனர்..!!!
தேங்கி கிடக்கும் தண்ணீரில் 
விர் என்று தங்கள் பைக்கில்
சிதற வேகமாய் செல்கின்றனர் !!!

தனக்கு குடை இருந்தும்
காதலன் தோள் மீது
தலை சாய்த்து கரம்
பற்றி ஒரு குடையில்
செல்லும் காதலி!!!

தேங்கிய சிறு
குட்டையில் துள்ளிக்
குதித்து விளையாடும்
சிறார்கள் !!!

திறப்புவிழா காண அமைச்சர்
வருக்கைக்கு காத்திருக்காமல்
வெள்ளோட்டமில்லாமல்
தன் சேவையை தொடங்கியது
புதிதாய் கட்டிய மழை நீர்
வடிகால்வாய்கள் !!!

குளிர்ந்த காற்று!!!
நல்ல மழை!!! அத்தனையையும்
ரசித்துக் கொண்டு
நனைந்து கொண்டே
அப்பாச்சி பயணம்
அலுவல் முடித்து
வீடு நோக்கி!!!

அழகு தான் !!! அழகு தான்!!! அழகு தான்!!!!

மழையில் ரெயின்கோட்டில் 
மழலையும், குடைக்குள் 
மங்கையரும், அவர் 
தலையில் மலரா மல்லிகை 
மொட்டும், அதில் மயங்கும்
நம் மனமும், மலர்ந்த
முல்லையும், குளித்த 
மரஞ்செடிகளும், அதன் நுனியில் 
இருந்து கீழே குதிக்க
தயாராய் நிற்கும் 
மழைதுளிகளும், அதில்
பிரதிபலிக்கும் சூரியனும், காதோரம்
கேட்கும் மெல்லிய
இசையும், பாதுகாப்பான
"அப்பாச்சி" பயணமும், சூடாய் இஞ்சி
தேனீரும், சாலையில் விற்கும்
நவராத்திரி கொலு பொம்மையும் அழகு தான் !!!
அழகு தான்!!! அழகு தான்!!!!

கொடைக்கானல், ஊட்டி,
தொட்டபெட்டா, கோவா
என்று ஒரு நாளில் சுற்றி வந்தேன்!!!
வேரென்ன நம் போயஸ் தோட்டமும்,
ஆழ்வார்பேட்டையும், மயிலாப்பூரும்,
கடற்கரைச் சாலையும் தான் அப்படி
மாறியது பெய்கின்ற மழையிலும்,
வீசுகின்ற மென்மையான குளிர் காற்றிலும்!!!

Wednesday, October 17, 2012

நகரத்தில் ஒரு கிராம வாழ்க்கை!!!

நேற்றய கோவத்தை 
தீர்ப்பதற்காக இன்று
காலை எங்கள் இல்லம்
வந்தாய்!!! மழையே நன்றி !!!

நீ வந்ததை ஆழமாக பதிவு
செய்திருக்கிறாய்!!!

உன் நீர் செல்ல சாலையில்
மா நகராட்சி தோண்டிய கால்வாய்க்காக‌
அருகே கிடந்த மண் குவியல்
வயக்காட்டு வரப்பானது!!! ஆம்
கருஞ்சாலை செஞ்சாலையானது
தண்ணீர் தேங்கி!!
நாத்து நடாத குறைதான் !!!

வயக்காட்டில் வரப்பில்
சென்ற ஞாபகமாய்
நாங்கள் நடந்து சென்றோம் !!!
எப்படியோ மழை நீர் - கால்வாயில்
செல்ல வில்லை என்றாலும்
மழை நீருக்காக வெட்டிய குட்டையின்
ம‌ண்குவியலின் மீது நாங்க‌ள் நடந்தோம்!!!
மா நகராட்சிக்கு நன்றி !!!
ஒரு வகையில் உதவியதற்கு!!!

நகரத்தில் ஒரு கிராம வாழ்க்கை!!!

வயக்காட்டுக்கு வேலைக்கு
சென்ற விவசாயிக்கும்
இன்று ந‌டந்து சென்ற‌
எங்களுக்கும் ஒரே வித்யாசம் தான்
அவர்கள் கையில் மண்வெட்டி!!!
எங்கள் கையில் மடிக்கணிணி!!!

சரி தண்ணீர் தேங்கிய சாலையில்
எங்கள் சக்கர வாகனங்களில்
சென்றது ஏதோ டிஸ்கவரி டிவியில்
காட்டுக்குள் எருமைக்கடா ஜீப்பில்
சகதிக்குள் சென்றது போல் இருந்தது!!!

மழையே.. !!!இது உனது காலம் !!!

மழையே.. !!!
என் வீட்டிற்க்கு வராவிட்டாலும்
எங்கள் அருகே உள்ள இடங்களில்
ஈரம் காயாத சாலையும்
குளித்து வந்த குதூகலத்தில் 
பச்சிளம் மரங்களும் அதன் மீது 
மென்மையாய் வருடும் காலை வெயிலும்
அழுக்காய் இருந்த
சென்னையை சிறிதாய் 
குளிப்பாட்டி
அழகாக்கி
நீ விட்டுச் சென்ற
சுவடுகளைக் கண்டு
ம னம் மகிழ்ந்தது!!!

எப்பொழுது வந்திருப்பாய்
என்றென்னும் போது
வீசிய பனிக்காற்று மூலம்
வாக்கு மூலமாய் நீ
சற்றுமுன் வந்ததை
அறிந்தேன்!!!

விடியல் நேரத்தில்
வாசல் தெளித்து
கோலம் போட்டுச்
சென்றுள்ளாய்!!!

நல்வரவாகட்டும் உந்தன்
விஜயம் !!!
இது உனது காலம் !!!
சற்று தாமதம் தான்
உன் வரவு
இருந்தாலும்
இனிமை நிறைத்திடு !!!

Friday, October 12, 2012

புதிதாய் எனக்குள் ஒரு குழந்தைத் தனம்...


சிறு குழந்தை
ஆகிவிட்டேன் சில தினங்கள்...!!!

அசாதாரண பேச்சை
அதட்டல் என நினைத்துக் கொண்டு
அழுது கொண்டு 
இருந்தேன் !!!

இந்த குட்டி பொம்மை 
வேண்டுமென அடம்பிடிக்கும்
குழந்தை போல‌
இந்த குமார் எனக்கு
வேண்டுமென‌
உன்னிடம் உன்னையே 
திரும்பக் கேட்டேன்!!!
கண்ணில் கண்ணீர் ததும்ப!!!

பருவ காலம் 
கடந்துவிட்ட‌
நம் உறவில் இதென்ன‌
புதிதாய் பிறக்கிறது
குழந்தைத் தனம்... 
இருந்து விட்டுப் போகிறது !!!

தன் பிள்ளையை
தட்டிக் கொடுப்பது போல
"இதுக்கெல்லாம் கோபப்பட்டால்
எப்படி மாப்பிள !!! ???"
என செல்லமாய் கேட்டுவிட்டு
"இன்னும் எத்தனை சண்டை
காத்திருக்கிறது" எனச் சொல்கிறாய்!!!
இதுதான்
கொஞ்சவும் செய்து
கிள்ளியும் விடுவதா???


கண்ணீருடன் கூடிய‌
சிரிப்புக்கு சிறப்பு அதிகம்!!!
இதுவும் அப்படியே...

Monday, October 1, 2012

பிரபஞ்சம் வரைந்து வைத்த ஓவியம் நீ - நிலவே!!!

பௌர்ணமியே...
மேகம் விலக
மெதுவாய் நீ
காட்சியளிப்பது,

இந்த பிரபஞ்சம்
வானம் எனும்
காகிதத்தில்
மேகம் எனும்
கரித்துண்டு கொண்டு
வரைவது போல்
தோன்றுகிறது...


நீ எவ்வளவு தான் 
அழகாக தோன்றினாலும்
பிரபஞ்சம் ஒவ்வொரு 
முறையும் உனை  வரைந்ததும்
திரும்ப மெல்லமாய்
அழித்து மீண்டும் மீண்டும்
மெருகூட்டி உன்னை
வரைந்து கொண்டே இருக்கிறது

ஒரு திங்களில் மீண்டும்
மிளிர்கிறாய் இதற்கு
முந்தய திங்களைவிட !!!