Saturday, June 30, 2012

அடியே அப்பாச்சி..

உன்னோடு நான் வருகையில்
உன் கரம் பற்றவில்லை எனில்
உயிர் சேதம் இருவருக்கும் தான்..
அடியே அப்பாச்சி..

சிரிது தூரம் கைவிடும் போது கூட
நீ என்னை அரவணைப்போடு அனைத்து செல்கிறாய்..

நான் உன்னை இயக்கினாலும்
நீ என்னை நகரச் செல்கிறாய்..


நேற்று பெய்த மழையின் தொடர்ச்சியாய்...

நேற்று பெய்த
மழையின் தொடர்ச்சியாய்
இன்று கண்டு ரசித்த
காட்சிகள் சில....

சற்று முன் உலர வைத்த
பாவையின் சிகையாய்
நடைபாதை - அதில்
இலை உதிர் காலம்
சூட்டிய வேப்பம் பூ
அழகாய் படர்ந்து
மிலிர்கிறது

தூய்மையான காற்றை
மறுபடியும் கார்பன் - மொனோ - ஆக்ஸைடு
புகையால் மாசுபடித்தினோம் 

பொய்த்த மழை பெய்து தீர்க்க.. கவிதை ஒன்று தோன்றியது..


பொய்த்த மழை
பெய்து தீர்க்க‌
சிறு குளங்கள்
சாலையோரம் தோன்றி
நீந்திச் சென்றேன்
வாகன நெரிசலில்...

மேகம் சிறிதும் இன்றி வானம் மிரட்ட,
முட்டி நின்று சில வாகனமும்
முரண்டு பிடித்து சிலவும் நிற்க நடுவில்
நகர்ந்து சென்றோம் நத்தையாய்..
நானும் என் பொன்டாட்டியும்.. ( Apache )

தெளித்து வைத்த 
வாசலாய் சாலை..அதில்
முக்காடு போட்டுக் கொண்டும்
முனங்கால் வரை கால்சட்டை மடித்தும்
ஆவி பறக்கும்
வடை கடை
தாண்டி
ஒரு குடையில்
இரு கைகள் இணைந்து
கசிந்து கொண்டிருந்தது
காதலாய்..

வீடு சென்று 
நண்பனைக் கூட்டி
வியாழனும் ஆகிப்போக‌
வினாயகருக்கு
விளக்கு ஏற்றினோம்..

வலம் சுற்றி வந்து
வெண்ணை சாத்திய 
ஆஞ்சனேயரை
கைகூப்பும் பொழுது
" வெண்மையாகி போனதனால்
நெய் மறுவி
வெண்"ணை" ஆனதோ"
எனத் தோன்றியது..

பெய்யென பெய்தது
மழை மட்டும் அல்லாது நான்
மழலையில் பயின்ற தமிழும் தான்.. 

:-)