- நமசிவாயம்
20.06.2017 - 12.14am
சற்று தொலைவில் நின்று
கண்டுகொள்ளாதிருக்க,
அருகினில் வந்து நீயே
அறிமுகமானாய்...!!!
அன்பின் அடையாளம் காட்டி
சற்று தள்ளி நிற்க -
முதலில் முறைத்த நட்பும்
நகைத்து அரவணைக்க -
உறவுகளும் உற்சாகமாகி
புதிதாய் தங்கைகள் மலர்ந்து
வண்ணங்கள் ஆனது...!!!
நீ உலகை மட்டும் அல்லாது
உன் கனவுகளோடும் நித்தம்
போராடுகிறாய்...!!!
உலகினில் உன்
கனவை விதையாய்
நடு....அது
மரமாய் வளர்ந்து
மலராய் மலர்ந்து
கனியாய் கனிந்து
காயாய் கசந்து
பழமாய் இனித்து
பின் விதையாய்
விழுந்து பல சோலை
அமைந்திட என்றும்
உமக்கு வேண்டிய
காற்றாய்
தண்ணீராய்
அரணாய்
இவ் ஆண்மை
உன்னை போற்றுதும்
எம் அருமை
பெண்மையே...!!!
இனிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்...
Happy Women's Day
08.03.2017
அன்பு சகோதரருக்கு,
வணக்கங்கள். இங்கு நலம். தாங்களும் நலம் எனச் சொல்லாமல் சொன்னது உங்களின் மின்மடல். மறந்து போன ஒன்றை மறுபடியும் ஞாபகப்படுத்தும் முயற்சிக்கு பாராட்டுகள்.
தாமதமான பதில் மடலுக்கு மண்ணிக்கவும். திருப்பதிக்கு திடீர் பயணமாய் சென்றிருந்தேன். அக்கா மற்றும் மாமாவோடு. அங்கு நல்லதொரு புது அனுபவமாய் கீழிருந்து மேல் திருப்பதி வரை நடந்து சென்றிருந்தோம். எந்திர வாழ்க்கையில் நனைந்து விட்ட நம் உடலுக்கு சற்றே வேலை கொடித்தோம். புத்துணர்ச்சி தந்த பயணமானது.
மடல்கள் முதலில் நம் பிரியமானவர்களுக்கும், பிரிவினால் ஏங்குபவர்களுக்கும் அனுப்பிக் கொண்டிருந்தோம். நாளடைவில் தொலைபேசிகள், "கொரியர்" சேவை வந்துவிட தகவல் பரிமாற்றம் இன்னும் துரிதப்பட்டது. பின்பு கைபேசிகள் வர குறுஞ்செய்தியும் பழக்கமானது. உடனடியாய் பதில் சொல்லி பழக்கப்பட்டோம்.
சேவைதாரர்கள் மிக கச்சிதமாய் பயன்பாட்டு தொகையில் நெருக்கம் தந்தனர். இருந்தும் சிக்கனமாய் பயன்படுத்தினோம். They limited our usage to 200 messages and still we effectively used. They introduced 2g networks and introduced web based messenger. இங்கதான் twist. They made us unlimited usage. What we do? At the starting phase yes we used abnormally and now it is been minimised. Even though we have no boundaries, we stopped messaging each other. Replying for a message also we are not doing.
எளிதாகிப் போனதால் என்னவோ மதிப்பிழந்து சாதரணமாகிப் போனது. பதில்கள் வராத காரணத்தினால் அன்பிலும் விரிசல் ஏற்பட்டு போகிறது. நாட்கள் நகர மடல்களின் நிலமைதான் ஆனது.
உங்களின் இந்தத் தூண்டல் என் பிரியமானவர்களுக்கும் மடல் எழுதச் சொல்கிறது. நாம் இழந்த மடல்களை மட்டும் அல்ல, அன்பினையும் உயிர்பிக்கும் என்ற நம்பிக்கை ஊட்டுகிறது. இதுஒரு எதிர்பாராத பரிசாக, பொக்கிசமாக அமையும் என்பதில் ஐயமில்லை...!!!
எளிமை வளிமை சேர்க்கின் அது பயனே...!!!
ப்ரியமுடன்
அன்புத் தம்பி
நமசிவாயம்
சென்னை
07.03.2017
என் தங்கையுடன் கடந்த ஒருவார காலமாக எலும்பியல் நிபுணரிடம் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது. என்னை ஒரு வேலையும் செய்யாமல் ஒரு மணி நேரம் அமரச் செய்தால் , ஒன்று உறங்கி விடுவேன், இல்லை சற்றே சுற்றம் கவனிப்பேன். இந்த நாட்களில் இரண்டாம் ரகமானது எனக்கு...கவனித்த காரணமாய் இதைப் பகிர்கிறேன்... சிந்தனை என்றதால் வினாக்களும் எனக்கு உண்டு...கலந்துரையாடுவோம்...!!!
நம் உடல்அமைப்பும் செயல்பாடும் நம் சுற்றுச்சழலை ஒத்தே இருக்கும் என்பதில் ஐயமில்லை... வெயில் பழகிப்போன ஒன்று நம் அனைவருக்கும்...நம் தோலின் வண்ணத்தின் காரணமும் அதுதானாகும்...
மருத்துவமனையில் அமர்ந்து கவனித்த பொழுது இங்கும் அங்கும் சென்ற நபர்கள் சொல்லித் திரிந்தது வைட்டமின் D குறைபாடு தான்... அதனால் தான் வந்து விட்டது மூட்டு வலியும் முதுகு வலியும்...இதே காரணம் தான் என் தங்கைக்கும்...
இன்றைய அலுவலகம் குளிருட்டப்பட இயற்கை காற்றையும், சூரிய ஒளியையும் இழந்து குறைபாடனது...நம் உடம்பு வெயிலுக்கு பழக்கப்பட்டது...நம் பெற்றோர்களும் அலுவலகம் சென்றனர். அவர்கள் யாரும் இப்படிப் பட்டதில்லை...அன்றைய அலுவலகம் ஜன்னல்கள் கொண்டது. சூரிய ஒளியும் உள்ளே வரும். இயற்கை காற்றும் உள்ளே வீசும்.
இது ஒருபுறம் எனக்கொள்ள மற்ற நோயாய் மன அழுத்தம், சோர்வு என அடுக்கிச் செல்லலாம். நாகரீக வளர்ச்சியில் உடம்பின் செயல் பாடுகள் குறைந்து போயிற்று. இயந்திரங்கள் நம்மை சோம்பேறிகளாய் ஆக்கி ஆடம்பர வாழ்க்கையில் ஆரோக்கியம் தொலைக்கிறோம்...
"குளிரூட்டப்பட்ட சவப்பெட்டியாய்
இன்றைய அலுவலகங்கள்...அதில்
அடிப்படை சத்துக்கள் செத்து
மூச்சுள்ள காரணத்தினால்
எம்பார்மிங் செய்யப்படாத
உயிருள்ள பிணமாகிப் போனோம்...!!!"
நேரம் கிடைக்கும் போது அலுவலகம் விட்டு வெளியே வாருங்கள்...அவ்வப்பொழுது இயற்கை காற்றை சுவாசியுங்கள்... சூரிய ஒளி நம் உடம்பினில் படட்டும்... முடிந்தவரை இயந்திரங்களை ஒதுக்கி உடம்பை இயக்குவோம்...!!!
"ஆடம்பரம் ஆரோக்கியமாகாது
ஆரோக்கியம் ஆடம்பரம் ஆகட்டும்...!!!"
தடைகளை தகர்த்திய
களத்திற்கு வந்தது
ஓர் தடை...!!!
கரை ஒதுங்கிய
கச்சா எணெணையால்
தனை கருப்பாக்கி கடலும்
கண்டனமும் தெரிவித்ததோ...
கண்டது நம் ஒற்றுமை மட்டுமல்ல
நம்முள் ஒளிந்திருக்கும்
ஒழுக்கமும் தான்...!!!
எம்மை நீ அறிந்து
உம்மை நான் அறிந்து
நட்பு பாராட்டி, கதிரென வளர
இடையில்இருவர் இடத்தும்
புகுந்தது சில களைகளாய்...
இருந்தும் அறுவடை செய்தோம்...!!!
உண்ணாவிரதம் முடிக்க வந்த
ஓர் உணவாய் இவ்வஹிம்சா வழி
போராட்டத்தை முடித்து வைக்க
வந்ததோ ஒரு வன்முறை...!!!
விளைச்சல் ஈட்டியும்
விவசாயி தான் கொண்டாடினானா??
அஹிம்சை என்பது
போராட்டத்திற்கு மட்டுமா?
கொண்டாட்டத்திற்கும் சேர்த்துத்தான்...!!!