வாழையடி வாழையாக...
குழுமம் அல்ல இது
ஓர் குடும்பம்..!!!
பயிலப் பயில என் வயது குறைகிறது....
வாருங்கள் நாம் செல்வோம்
மாணவனாய் நம் பள்ளிப்பருவத்திற்கு...
நண்பர்களாய் நம் கல்லூரி பருவத்திற்கு...
நானும் பயில்கிறேன்
நான் படிக்க மறந்ததை...
இங்கு படிக்கும் மாணவர்களோடு...!!
இன்று நான் சேர்ந்து ஆறு மாதமாக
பயில்கிறேன் நான் என் முதல்வகுப்பில்...!!!
நான் பயின்ற பாடம் எது?
படம் வரையக் கற்றுக்கொள்கிறேன்...!!!
ஆவல் கூட்டும் அறிவியல்
செயல் விளக்கம் - எளிதாய்
புரிந்து கொண்டேன்!!
கணிதம் கற்றேன்
கடினம் இன்றி...!!!
இந்த வருடம் எதெனக் கேட்க
தமிழ் மீது ஆர்வம் என சொல்ல
தமிழ் பாடம் கற்கச் சொல்கின்றனர்...!!!
புதிதாய் வார்த்தைகளையும்
அதன்அர்த்தங்களையும்..!!!
லகர ளகர ழகரமும் தான்...!!!
இங்கு பயிலும் மாணவர்களோடு
என் பிழைகளைத் திருத்திக்கொள்ளும்
மற்றொரு மாணவனாய் காத்திருக்கிறேன்..!!!
பள்ளிப்பருவம் சொல்லிவிட்டேன்...
அதென்ன கல்லூரிப்பருவம்???
தொலைந்து போன நண்பர்களை
இங்கு கண்டு கொள்ளலாம்....
நம் செயல் திறன் கூட்டும்
ஒத்த கருத்துடையவர்கள்...
கலந்துரையாடல்கள்...
புத்தக விமர்சனம்...
சினிமா விமர்சனம்...
வரலாறு அரிதல்...
உணவு பழக்க முறை பரிமாற்றம்...
பயணக் கட்டுரைகள்...கூடவே.
விளையாட்டும் கூடத்தான்...
மாணவர்களுக்கு ஓர் ஆசானாய் இல்லாமல்
ஓர் அண்ணனாய் அக்காவாய்
நாம் கற்பிக்கும் முறை வகுத்தல்
சிந்தனைப் பரிமாற்றம்
செயலாய் முழுமை பெறும்
ஒவ்வொருவர் ஒத்துழைப்போடும்
ஒறுக்கிணைப்போடும்...
வாழை மரங்கள் தோள்தொட்டு வளர
நானும் கைகோர்த்து வளர்கிறேன்...!!!
ஓர் வாழையாக....!!!
- நமசிவாயம்
20.06.2017 - 12.14am
Hii, This is Great Post !
ReplyDeleteThanks for sharing with us!!!!
Digital marketing agency in chennai
Best SEO Services in Chennai
seo specialist companies in chennai
Best seo analytics in chennai
Expert logo designers of chennai,
Brand makers in chennai