Wednesday, December 26, 2012

NICE 3

NICE - 3

நான் தடுமாரும் சமயங்களில்
என் நண்பன் குமார் தாங்கிப் பிடிப்பது வழக்கம்...!!!
அன்று அவன் உரைத்தது " உன்னைப்போலே மற்றவரும்
நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பாக்காதே!!!" என்று
சற்று நிதானமாக யோசித்தேன் - சரிதான் அவன் சொன்னது!!
வீடு மாறவில்லை. பழைய படி நண்பர்களோடு பேசத் தொடங்கி
நார்மல் வாழ்க்கை தொடர்ந்தது!!!

சிலர் Ravikannan Alagarsamy, Aru Mugam, @anand (Vijay Brother) தங்களது
படிப்பை முடித்து விட்டு வேலை தேடி சில மாதங்கள் எங்களூடன் தங்கியதும் உண்டு..!!

வேலை கிடைத்து இடபற்றாக்குறை காரணமாக
புதிதாக வீடு தேடி பெயர்ந்து விடுவர்..
இருந்தும் அன்பு இதுவரை குறைந்ததில்லை...
நினைவோடு சந்தர்ப்பங்களில்
சந்தித்து கொண்டு
மகிழ்ச்சி பரிமாரிக் கொள்கிறோம்..

அவ்வப்போது சில நண்பர்கள் ஊரிலிருந்து வருவர்..
அவர்கள் வியாபார நிமித்தமாக வருவர் Giritharan Suthanthiran
Stanley, Suresh Sankar
அவர்கள் வரும்பொழுது அவர்களை உபசரிப்பது தனி ஆனந்தம்...!!!!

இது வீட்டில் என்றால் மீதி 8,9 மணி நேரம் அலுவலகத்தில்..
அங்கு சம்பாதித்தது நல்ல சில மனிதர்களின் நட்பு...
முதல் வேலை...முதல் நாள்..
என்னை அழைத்துக் கொண்டு செல்கிறான்
அவன் பெயர் விஜய்..
அண்ணா நகரிலிருந்து
அண்ணா சாலைக்கு
மதியம் 12 மணிக்கு
வாடிக்கையாளரை சந்திக்க...
போகும் வழியில் நேரம் ஆக
வண்டியில் விரட்டிச் செல்ல
நந்தனம் அருகே பிடிபட்டோம்
காவல் அதிகாரியிடம்...பின் மாலையில்
நடமாடும் நீதிமன்றம் சென்று மீட்டு வந்தோம்...!!!
அவனது தலையீட்டால் புதியதொரு வேலை கிடைத்தது எனக்கு..!!

பின் தொடர்ந்து வந்த வேலை மாற்றங்களிலும்
நண்பர் வட்டாரம் பெருகியது.. அதனால் நன்மையும் பல..
ஜெசுமாவில் பாலா சார்.. முதல் முறையாக
திருவண்ணாமலை, திருப்பதி சென்றேன் அவருடன்..
இன்றும் திருவண்ணாமலை கிரிவலம் செல்லுவது அவருடன் தான்..

சுதர்சன் சார்...
என் பணிக்கான பாதையை
பழக்கப் படுத்தியவர்..நல்ல வழிகாட்டி..
இவரை பெற்றது எனது பாக்கியமே..!!
அடுத்ததாக softcell நண்பர்கள்...
கிட்டதட்ட வீட்டு உறவினர்கள் என்றே சொல்லலாம்..!!
ஆப்பரேசன் முடிந்து புது வேலையில் சேர்ந்தாலும்
மிக பொருப்புடன் கவனித்துக் கொண்டனர்..!!
இதுபோல் நண்பர்கள் வேரெங்கும் கிடைக்காது..
இதுவும் ஒரு வரம் தான்..!!

இங்கு சந்தித்த நண்பர்கள் மூலம்
சில புதிய நண்பர்கள் அறிமுகமாக ( Ashok Krishna )
வாழ்க்கை அர்த்தமானதாகவும் ஆனது !!!
அன்பின் பாதையில் செல்லத் தொடங்கியது..!!!

Thursday, December 20, 2012

NICE - Nanbargal in Chennai Episode 2

NICE - 2

சந்தோசம் மட்டும் தானா
என்றால் அதான் இல்லை...
சில சண்டைகளும் வந்தது...

3,4 பேரில் தொடங்கி படிப்பு முடித்ததும்
அனைவரும் படை எடுத்தோம் சென்னைக்கு...
முதலில் 10,11 பேரை தாங்கியது 
வீடும், வீட்டு உரிமையாளரும்..
அவ்வளவு எளிதல்ல உரிமையாளர் சம்மதிப்பது...

ஒருவர் பின் ஒருவராக பணி அமர
இருசக்கர வாகனம் அவசியமானது...
நிறுத்த இடமின்றி இரு கூடானோம், அருகருகே
சிறு மன வருத்தத்துடன்!!!

பின் வீட்டில் ராஜேஸ் TV வாங்க
அப்பொழுது தெரியவில்லை
அடுத்த சண்டை வரும் என்று...

சும்மா இருந்த சிங்கத்தை எழுப்பிய
கதையாக channel மாத்துவதில் ஒரு
சண்டை வந்து பின் சண்டையே வந்துவிடக் கூடாதென்று
புதிதாய் ஒரு TVயும் TaTa Skyயும் வந்தது...

இவ்வாறாக ஒரு வருடம் சென்றது
வேலையில் அனைவருக்கும் சிறிதாய் முன்னேற்றம்..!!!
எத்தனை நாள் தான் கிருஸ்ண பவனிலேயே சாப்பிடுவது..
வள்ளியின் அலுவலக நண்பர்கள் தயவால்
சரவணன் மாஸ்டர் சிக்கினார்...
அய்யர் வீட்டு சாப்பாடு..அறுசுவையாய்...

கொஞ்சம் மாதங்கள் கலித்து
அய்யர் சென்றுவிட கீழ் வீட்டு
அம்மாச்சி சமைத்து தந்தார்..இதுவும்
அறுசுவைதான் அதோடு அசைவமும் உண்டு...

காலையில் எங்கள் வீடு வள்ளி அலுவலக நண்பர்களின்
கூடாரமாகி கும்மாளம் குதூகலம்...
இதுவொரு மூன்று நான்கு மாதம் செல்ல
அம்மாச்சியும் சென்றுவிட வேறு ஆள் தேடினோம் சாப்பாட்டிற்கு
ருசிகண்டுவிட்டோம்...சிக்கலானது ஓட்டலில் சாப்பிட...
குமார் வந்தார்..தினமும் தாமதம்...அவருடனும் சண்டை...

நண்பர்களுக்குள் சிறு மனக்கசப்பு
ஏற்பட்டு ஒரு சில
நண்பர்கள் பிரிந்தனர்..

வருடம் இரண்டானது...
சூழ்நிலை..வீடு மாறினோம்..
19/1, கீழ்பாக்கத்திலிருந்து 7/6, சூளைமேடு
பெயர்ந்தோம்...

வள்ளி திருமணம்..எண்ணிக்கையில் ஒன்று குறைய
புதிதாய் வந்தார் பிரசாத்...
புதிய நட்பு..ஒரே ஊர்க்காரர்..பழகிவிட்டோம் சில நாட்களில்

வீட்டின் அருகில் சமையல் செய்ய ஆள் கிடைக்க
சமையல் பாத்திரம் வாங்கினோம்...சமையல் ஆரம்பித்தோம்...
காய்கறி வாங்குவது, பலசரக்கு வாங்குவதென்று தினமும்
புதியதொரு வேலை சேர்ந்து கொண்டது..
பின் அதிலும் சண்டை வந்தது..
யார் வாங்குவதென்று...என்ன வாங்குவதென்று..!!

பின் ராஜேஸ் பெங்களூரில் வேலை கிடைத்து
இடம் பெயர...நிறைய சந்தோசம் இருந்தாலும்
சிரிது வருத்தம்
ஒரு பெரிய கை குறைந்து விட்டது
வீட்டை பார்ப்பதில், கேரம் விளையாடுவதில்,
பின் முத்துவிற்க்கு ஈடுகொடுக்கவும்...
சாமிக்கு(கார்த்திக்கு) சினிமா செல்வதற்க்கும்.. ;-)

இங்கும் வந்து சேர்ந்தது "வெள்ளம்" மறுபடியும்
இரண்டு நாள் மின்சாரமில்லை சபரி வீட்டுக்கு
மூட்டையை கட்டிக் கொண்டு சென்றோம்
அன்று மும்பையில் ஹோட்டல் தாக்குதல் துயரம்..

தெரிந்து கொண்டது சரஸ்வதி பூஜையை ஓட்டிய
நாட்களில் சென்னையில் நல்ல மழை பெய்யும்...!!!

மாதங்கள் உருண்டோட ஒருநாள்
சாப்பிட அனைவரும் சாப்பிட செல்ல
விளையாட்டாய் ஆரம்பித்தது ஒரு விணை!!!
பெரிய சண்டை... வாய்த்தகராறு...
அதுவரை வந்ததில்லை அப்படியொரு பெரிய சண்டை!!!

இரண்டு மூன்று நாட்கள் பேச்சு இல்லை எங்களுக்குள்!!!
ஒரு கனத்தில் நான் யோசித்தது
இந்த வீட்டில் இருக்க வேண்டுமா என்று..
நிலை தடுமாரிப் போனேன் !!!!

NICE - Nanbargal in Chennai Episode 1

A Nice day to remember (17.12.2012)...Its been 8years rolled out in Chennai...
8 வருடங்களுக்கு முன்பு 
வாழ்க்கையில் முதல் முறையாக 
வீட்டை விட்டு ஏன் 
ஊரை விட்டு நெடுதூர பயணம் .... 
வேலைதேடித்தான் வேரென்ன 
சென்னைக்கு தான்...
பெற்றோரை பிரிந்தாலும்
பிரிதல் தெரியாது பிரியமான
நண்பர்களுடன் மேன்சன் தவிர்த்து
வீடு பார்த்தோம்...ஒரு குட்டி சண்டை
போட்டு வீடு வாடகைக்கு கிடைத்தது..

நண்பர்கள் உறவினராக
ஒவ்வொரு தருணமும்
அன்பை பரிமாரி இரவில்
அனைவரும் வரும் வரை காத்து
எல்லோரும் சேர்ந்து உணவு உண்டு
காலம் க டத் திநோம்...

மறக்க முடியா 7H, 47A
பேருந்து பயணங்கள்!!!
நுங்கம்பாக்கத்து கன்சல்டன்சி
கதவுகளை தட்டிய ஞாபகம்!!
முடிந்த பிறகு மதிய நேர
ஆந்திரா மெஸ் உணவு...
பின் வீட்டிற்க்கு வந்து
விகடன், குமுதம் சகிதம்
FMல் சங்கீதம் தான் பொழுது போக்கு!!!!
சனிக்கிழமைகளில் புதிய படங்கள்,
ஞாயிறுகளில் கடற்கரை பயணம்...

இது மட்டுமா சுனாமி சோகம் சேர்ந்து கொள்ள
அன்று தான் கற்றுக்கொண்டும் அரசியல் என்ன என்று..
நாம் யார்...வெறும் முட்டாள் தான்...

ஒரு வழியாக முதல் வேலை கிடைத்தது...
ஒரு சனிக்கிழமை தாத்தாவை இழந்தேன்..
அன்று இந்த பட்டினம் எனக்கு சொல்லி கொடுத்தது
ஒன்று தான் இந்த வாழ்க்கை இரக்கமற்றது என்று...

முதல்முறையாக ஒரு மழைக்கால காலைப் பொழுதில்
வீட்டு வாசல் வந்தது "வெள்ளம்"
அன்று முழுதும் தண்ணீரில் நேரம் களித்து
மின்சாரமும் இல்லை, சாப்பிட சாப்பாடும் இல்லை
ஒரு வழியாக சமாளித்தோம்..!!! மெழுகுவர்த்தியுடன்...

காலையில் கிருஸ்ணபவண் பொங்கலையும்
இரவில் பக்கத்து வீட்டுகாரரிடம் வாகனத்தை
நிருத்த சண்டையுமாய் உருண்டோதியது சில மாதங்கள்...

புதிய வேலைக்கு மாறினோம்...
புதிய வீட்டிற்க்கும் மாறினோம்...
சில புதிய அருகில் குடியிருப்போர்
நண்பர்களாய் கிடைத்தனர்...

ஒவ்வொருவரின் பிறந்தநாள்
கொண்டாட்டம் இரவிலும் பின்
சத்யம் தியேட்டரிலும் இன்பமாய்
பொங்கியது...

வீட்டில் வள்ளியின் புண்ணியத்தால்
TV, Washing Machine, Laptop, Internet வர
வசதியானோம்...அவனுக்கு கல்யாணம் ஆக
ஒவ்வொன்றாய் கலண்டு கொண்டு சில
புதிதாய் எங்களுடன் சேர்ந்து கொண்டது...

புதிதாய் நண்பர்கள் கிடைக்க
அர்த்தமுள்ளதாகவும் ஆனது
வாழ்க்கை...!!!

ஆண்டுகள் கடந்தாலும்
நாங்கள் அப்படியே தான் இருக்கிறோம்
சுய முகவரியோடு !!!

சில தருணங்கள் கோலமிட
இன்னும் நிறைய இருக்கிறது
மனதிர்க்குள்...!!! மலர்ந்திடும் அவ்வப்பொழுது!!