Monday, September 24, 2012

"ரயில்" ஸ்நேகம்


உன்னை முதலில்
சந்தித்தது இந்த
புரட்டாசி சனியில் தான்

கம்மாய் கறை ஓரம்
அய்யனார் கோவிலில்
பொங்கலிட வரும்போது
பார்த்த உன்னை இன்று
நித்தம் என் வீட்டு
சந்தில் சந்திக்கிறேன்

சரியாகத்தான் பெயர்
சூட்டியுள்ளனர் உனக்கு..
ரயில் பூச்சி என்று..

இன்ஜின் புகைக்கூடாய்
உந்தன் இரு ஆன்டனாக்கள்
அதன் பெட்டியாய் உந்தன்
வகுக்கப்பட்ட உடல் அமைப்பு
சன்னலாய் மஞ்சள்
நிற வைரக்கற்கள்..

உன்னை தற்காக்க
சுருண்டு கொள்ளும்போது
என் யானைமடி கோர்த்த
தங்க மோதிரமாகிறாய்..

சந்திக்கும் வேலைகளில்
மலரும் நினைவுகள்..
புரட்டாசி மாத பொங்கலும்
அரை நாள் ஆதி காலத்து
வாழ்க்கையும்,
கம்மாய் கறை காத்தும்
 

கற்காலமும் கணிணி காலமும்

கற்காலமும் கணிணி காலமும்
இணைந்ததுதான் நம் தமிழ்நாட்டு
மக்களின் வாழ்க்கை
அரண்மனை வீட்டில்
அகல் விளக்குதான்
மிக்ஸி இருந்தும்
அம்மிக்கல்லும்
ஆட்டு உரலும் தான்
நல்ல வேளை 
தொலைக்காட்சியின் தொல்லை குறைந்து உற்றாருடன்
உரையாடல் அதிகரித்தது
மின்சாரம் குறைந்து
காலச்சக்கரத்தில் பின்நோக்கி
ஒரு பயணம் இதே காலத்தில்
இறந்த காலத்தின் சங்கமம்

Wednesday, September 19, 2012

"சங்கத்தமிழ் மூன்றும் தா" !!!

அன்னை கேட்டாள்
அக்காளும் கேட்டாள்... 
கவிதைக்கு காரணம் - 
"பிள்ளை" - யார்? என்றோ நினைத்து..!!!
அட கணேசா..பிள்ளையார் நீதானா..!!!

எனக்கு தெரிந்தது
உன் துதியும்
உன் சகோதரனின் துதியும் தான்

நித்தம் கேட்டதால்
அருளினாயோ ச ங்கத்தமிழ்
மீது பற்றை எனக்கு..
இதுதான் கடைசி வரிக்கு பரிசா !!!

நல்ல நண்பனாய்
நல்லது கெட்டது என்று
என்னுடன் இருக்கிறாய்..
நன்றி சொல்வேன்
அவ்வப்போது எப்போதாவது..!!!
தோன்றினால் ...!!!!

இதையும் நீயே செய்யச் செய்து - அட
சுய விளம்பரம் தேடிக் கொள்வோம்
நாம் இருவம் சேர்ந்து.. !!!

இத்தனை நாளும்
வரையும் போது
அழகாய் வந்த நீ
இன்று வரிகள் ஆகவும்
வந்து சிறப்பு செய்தாய்

சிறந்த நாள் எங்களுக்கு - நீ
பிறந்த நாளான இன்று - பிரியமானவனே..!!!

நிறுத்த முடியவில்லை
தொடர்ந்து
"சங்கத்தமிழ் மூன்றும் தா" !!! :-)