உரக்கத்திலும்
உரையாடிக்கொண்டிருந்தாயோ
நீ என்னிடம் தமிழே..
விழித்ததும்
விடியலாய்
உதித்தது
இந்த கவிதை...
Thursday, May 19, 2016
உரையாடல்
பால் நிலா சோறு
சந்ததிகள்
பல பிறந்தாலும்
சந்திரனைக் காட்டித்தான்
பால் சோறு ஊட்டுகிறார்கள்..
இரண்டையும் சேர்த்து
"பால் நிலா சோறு"
என்று சொல்லலாம்..
:-)
Wednesday, May 18, 2016
மழைச் சமையல்
கடுகு வெடிப்பது போல்
தேங்கிய தண்ணீரில் விழும் தூரல்...
இது சிறிய மழை...
விரித்து வைத்த வேட்டியில்
பிடித்து வைத்த வெங்காய வடகம்...
இது பெரிய மழை...
18.05.16
Friday, May 13, 2016
நீயா...நானா...
காற்றில் ஈரம் கூட்டி
மயில் இறகாய் மனம் வருடி...
மணல் தூசி இல்லாது
சுவாசம் புத்துயிர் பெற்று...
கண்களும் குளிர்ந்ததே
காணும் அழகினிலே...
நீ வந்து செய்யும்
மாயத்தில் மயங்கிறேன்...
மழையே...
ஓரிரு நாள் வந்த போதும்
தெரியவில்லை எனக்கு யார்
விருந்தாளி என்று...நீயா...நானா...
-13.5.15
அணிவகுப்பு
உங்கள் ஒருவனின்
ஒரு கடிக்கு
அலறிவிடும்போது
அணிவகுத்து வந்து
தாக்கினால்
அணு தெரியாமல்
அல்ங்கோலமாவோம்
ஏனடா இந்தக் கோபம்
எனக்கேட்கும்
பொழுதே உன்
தம்பி ஒருவன் என்
உடலை மெய்சிலிர்க்க வைத்தான்...
அதிசயம் என்னவென்றால்
ஒவ்வொரு குணத்திற்க்கும்
ஒவ்வொரு குழுமமடா...
அரும்பு துறு துறு எறும்பு...
-13.07.2012
Sunday, May 8, 2016
திருவிழா நாயகன்
உன் உருவம் தெரியாது...
இவர் உருவம் இதுவென்று
அறிமுகம் செய்து வைத்தாய்...
இவரின் சக்தி அதிகம்
எனில் இவருக்கு எடுக்கும்
விழாக் கொண்டாட்டம்...
உனக்குப் புகழ் அது சேர்க்கும்
இறைவனுக்கு சிலை
வடித்த சிற்பியே... !!!
உன் படைப்பை
கொண்டாடுகிறோம்
கடவுளாக கருதிக் கொண்டு...!!!
-8.5.13
கல்லிலே கடவுள்
கல்லிலே கடவுள்
ஒளிந்திருக்க - நாம் படும்
சங்கடத்தில் சந்தோசம்
ஒளிந்திருக்காதா என்ன ????
8.5.13
Saturday, May 7, 2016
காதலியும் தோற்றிடுவாள் உன் முன்னே...!!!
எனக்கின்று வயது 60...
என்றே இளித்தாள்..
கிளவரசியானாலும்
இன்றும் இளவரசிதான் இவள்...
பிறந்தபோது எனை
தூக்கி முத்தமிட்டாள்...
பாடித் தாலாட்டினாள்...
என்னோடு கதைத்தாள்..
கதை சொன்னாள்...
நானோ திரும்ப பேசாதிராத போது...!!!
அம்மா என்றே அழைத்தே அழுதேன்,
புன்னகை மட்டும் திரும்பச் செய்தேன்..!!!
ங் முதல் இன்று வரை
கற்றும் கொடுக்கிறாள்...!!!
காய்ச்சல் எனக்கு வர
துவண்டும் போகிறாள்...!!!
காயம் அவளுக்கு வர
கண்ணீர் எனக்கு வந்திராது
வலியோடு புன்னகைத்தாள்..!!!
பிடித்ததும் அவளுக்கு தெரியும்!
பிடிக்காததும் அவளுக்கு தெரியும்!!
தெரிந்தே சொல்வாள் இன்று
அஷ்டமி என்று...!!என் நலன் கருதி...!!!
திட்டியும் கோபமிராது உம்மென
நகர்ந்து செல்வாள், பத்து ரூபாய்
முடிந்து வைத்து...!!!
அந்த ரூபாயும் சில்லரை இல்லாது
என்னிடமே கடனும் பெற்று
கணக்கு முடிப்பதில் சண்டை இடுகிறோம்.!!!
முழுதாய் சாப்பிட்டேன்,
இவள் ஊட்டி விடுகையில்...!!
முப்பதைக் கடந்தும்,
இன்றும் அப்படித்தான்...!!!
சோர்வான போது இவள்
மடி போதும்...சாய்ந்தே புலம்பி
தெம்பாகிவிடும்... !!
இரவில் இவள் சேலை
மெத்தை போதும்... உன்னத உரக்கம்
தந்திடும்....!!!
ஐந்து நொடிக்கு அலாரம் எவனும்
கண்டதில்லை...இவள் அடித்து எழுப்புவாள்...!!!
திண்ணுட்டு தூங்கு என்று...!!!!
தோன்றும் வேளையில் அலைத்தே,
வேலையில் இருந்தும் சிலநொடி பேச வேண்டும்...!!!
முதலில் வாழ்த்தவில்லை என்றே
திட்டியும் பெறுவாள்...!!!
சேலை வாங்கினால் திட்டியும் தீர்ப்பாள்...!!!
பிடிக்காதை செய்த போதும்
கண்ணில் நீர்மல்க சொல்லுவாள்...
ஏன் நமசு இப்படி பன்ற...???
இதனை எழுதின போதும்,
படித்துக் காட்ட வெட்கம் எனக்கு...!!
படித்துக் கேட்டு பாராட்டுவாள்,
என்னத்த எழுதியிருக்க என்றே நகைத்து...!!!
காதலியும் தோற்றிடுவாள்
உன் நேசத்தின் முன்னே...!!!
- 07.05.16
Tuesday, May 3, 2016
பொய்யும் மெய்யாக
கோவித்துக் கொல்லாதே...
உனக்கு இடம் கொடுக்கவில்லை என்று..
ஒரு முறை அழைத்துக் கொள்கிறேன்..
"பொய்"யே நீயும்
மெய்யாய் வந்துவிடு..
:-)
Monday, May 2, 2016
தாயுமாகி...
தாயாய் அமர்ந்தின்று
மடியினில் உறங்கிட
அழைக்கிறாய் சித்திரை
சந்திரரே...!!! தாலாட்டும்
பாடிடுவாய் உன் அழகினிலே...!!!
02.05.14
அளவை அழகாக்கி...
அளவரிந்து வெட்டி
அழகாக்கி தன்
அடுத்த மாத வருமானம்
சேர்த்தார் - முடி திருத்தும்
நிலையத்தில்...!!!
01.05.2016