Sunday, May 8, 2022

கிராமம்

சுட்டெரிக்கும் வெயில்
வெயில் தணிக்க ஆங்கோர்
ஒற்றை மரம்...
மரத்தடியில் ஓர் பலகாரக்கடை
பலகாரக்கடை இருக்கையில்
சில சனங்கள்
சனங்கள் நிழற்குடை ஆன
நிழற்குடை பேருந்து நிறுத்தம்
நிறுத்தம் இருந்தும் நில்லாது
செல்லும் பேருந்து
நிற்கும் ஒரு சில பேருந்தில்
ஏறி இடம் இன்றி இன்ஜினில்
அமர சுட்டெரிக்கும் இக் கிராமம் தனில்...


விருதுநகர்
8.5.2022