ஆண்கள் தின சிறப்பு பதிவு...
சமீபத்தில் ott தளத்தில் வெளியாகிய
" சூரரைப் போற்று " படத்தின் விமர்சனம் ... (தியேட்டர்ல வந்தா என்ன ott ல வந்தா என்ன... நம்ம டவுன்லோட் சென்சு தான பாப்போம் என்ற வகையில்) எல்லோரும் படம் பார்த்திருப்பீர்கள் என்ற எண்ணத்தோடு....
வீட்டில் இருக்கும் பெற்றோர்களை கவனிப்பது மகன்கள் அல்ல, மகள்களே என்று தொடங்கி...
பெண் வீட்டிற்க்கு சென்று பார்க்கும் மாப்பிள்ளைகள் வாழும் சமுதாயத்தின் மத்தியில் மாப்பிள்ளை வீட்டிற்க்கு சென்று பார்க்கும் பெண்ணிடம் தொடங்கி...
கனவுகளை எதிர்நோக்கி எந்த உத்தியோகம் இல்லா மாப்பிள்ளை, சற்றே வித்தியாசமாய் ஆண்கள் மட்டும் தான் சம்பாதித்து பெண்ணுக்கு கொடுக்கணுமா, பெண் சம்பாதித்து ஆணுக்கு குடுக்க கூடாதா ? என்ற கேள்வியோடு...
இருவரும் சமரசப்பட்டு
கல்யாணம் முடித்தும், ஒரு சூழலில் பொண்டாடியிடம் கடன் வாங்க என்னடா வைராக்கியம் தேவை? என்று சொல்லும் அன்போடு...
நிறுவனம் விலைக்கு வர, இன்னல்கள் பல இருந்தும்,
அதை ஒப்புக்கொள்ளாது,
குடும்பத்தை பற்றி நான் யோசிக்கவில்லை என்று
கூறும் கணவன்..
(ஊட்டி விடும் மனைவியை சற்றும் யோசிக்காமல்) "விசம் வச்சுட்டயா?" என்று கேட்க...
"வித்துட்டு வந்துருந்தைனா" வச்சுறுப்பேனு சொல்லும் மனைவி...
இதற்கு அப்பால் இன்னல்களை கடந்து கனவுகள் நனவாகும்
ஒவ்வொரு மாறனின் வெற்றிக்கு
பின்னும் ஒரு பொம்மி இருக்கிறாள் என்பதை உணர்த்தும் படம் இது...
குறிப்பு: பொம்மி மனைவியாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்று இருக்க அவசியம் இல்லை. அவள் ஒரு தாயாகவோ, சகோதரியாகவோ, தோழியாகவோ, மகளாகவோ கூட இருக்கலாம்...
மற்றும் என்னைப் போன்ற புத்தகம் அதிகம் படிக்காதவர்களுக்கு ஒரு புத்தகத்தை (சுயசரிதையை) படமாக வெளியிட்டு கொண்டாடும் இயக்குனர் "சுதா கொங்குறா"வாகக் கூட இருக்கலாம்...
வாழ்த்துக்கள்... 😉😉😉
அருமை அருமை... 👌🏽👍🏼
ReplyDeleteNandri
Deleteசெமயானா பதிவு சர், வளர்க மென்மேலும்
ReplyDeleteArumai
ReplyDelete