Sunday, June 19, 2022

தந்தையர் தினம்

இவரும் ஒரு கவிஞராக இருந்திருக்ககூடும் ...
உங்கள் வரிகள்
கிடைக்கும் நாளுக்கு
காத்திருக்கிறேன்...

நாங்கள் இருவரும்
அவ்வாறாக பேசுவது
கிடையாது...
கார்த்திகை முதல் தை 
முடியும் காலம் மட்டும் 
நாங்கள் நெருங்கிப் பழகும்
காலம் அது ..
எனது படிப்பை பற்றியோ 
மற்ற விஷயங்களை பற்றியோ உரையாடல்கள் இருக்காது. 
அய்யனும், பூஜிக்கும் முறையும் பற்றியே நிறைந்திருக்கும்.
வாழ்க்கையின் தத்துவத்தை சரணங்கள் மூலம் என்னுள்
கடத்தி சென்றுள்ளார்
என்றே சொல்வேன்... 

கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தை...
குண்டும் குழியும்
கண்ணுக்கு வெளிச்சம்...
தூக்கிவிடையா.. ஏத்திவிடையா...
சாமியே...!!!  அய்யப்போ! !!!

உன் இழப்பு கண்டு
திக்குத்தெரியாது
யோசித்துக் கொண்டிருக்க,
எனை அறியாது என்
நெஞ்சு முடிகளை சுற்றிகொண்டிருக்கும்
என் கை விரல்கள்... 
நேரம் கெட்ட நேரத்தில்
அருகில் இருக்கும் சீப்பை
எடுத்து என் தலை கோரும்....
நீ எனக்குள் இருக்கும் 
தருணம் உணர்ந்து
என் இதழ் உதிரும் 
புன்முறுவல்... 

365 நாட்கள் கடந்து விட்ட போதும்
உன் நலம் விசாரிக்கும் 
உன் நண்பர்கள் கேட்கும் 
நிமிடமும் சேர்த்து...
365 வருடம் ஆனாலும்
நித்தம் ஏதோ ஒரு நொடியில்
உன் இருப்பு இங்கு நிலைக்கும்...

#தந்தையர் தினம்

விருதுநகர்
19.06.2022

No comments:

Post a Comment