தாய்க்குப்பின் தமக்கை தான்..
"தாய்க்குப் பின் தாரம்" என்று
தமக்கை இல்லாதவன்
சொல்லிச் சென்றுள்ளான்..
இல்லை ஒரு
தாரமான பெண் சொல்லியிருப்பாள்..
அம்மாவின் அரவணைப்பு
அக்காளிடம் மட்டும் தான் கிடைக்கும்..
அதனால் தான் என்னவோ
அகர வரிசையில் அவளையும்
இணைத்துள்ளனர்..
அப்பா...அம்மா....அக்கா...அண்ணன்..என்று!!!
No comments:
Post a Comment