Sunday, July 1, 2012

மணித்துளி..மழைத்துளி...

சில்லென்று வீசியது
மழைக்காற்று..
இழுத்துச்சென்றது
ஆச்சியின் குடையை..
அந்த வயதிலும் இளமையாய்
ஓடிப் பிடித்தார்..
கூடவே மழலைச் சிரிப்பு..

சர் என்று சில 
மணித்துளிகள்
மழைத் துளிகள்..
நண்பனுடன்
சிறு தூரம்
தூரலில் பயணம்..
என் அப்பாச்சியோடும் தான்..

No comments:

Post a Comment