Saturday, July 7, 2012

நிலவே.. நிஜமாய்


நிலவில் இருந்து கொண்டு
நிலத்தின் மடியில் படுத்திருக்கிறேன்..
நிஜமாய் நினைவுடன்
நின்னை நித்தம்
நிமிர்ந்து பார்க்கிறேன்
நெடுவே இருந்தாலும் நம்
நடுவே காற்றும்
இசையாய் இருக்க கண்களில்
இமையாய் இணைந்திருப்பாய்..

மேகம் உன்னை
வருடிச் செல்வதுபோல்
நீ என்னை
வருடுகிறாய்
வெண்ணிலவே..

உன்னை ரசிக்கிறேன்
உள்ளம் கணிந்து..
என்னை உரங்கவைத்துக் கொண்டே
உலகம் சுற்ற சுற்ற‌
உன் இடம் நகருகிறாயே...

No comments:

Post a Comment