படுக்கை அறை மெத்தையை விட
அடுப்பங்கறை பூத்தரையில் தான்
சுகமாக தூங்குவாய் நீ..
உலகில் உனக்கு
பிடித்த இடம் எது என்று கேட்டால்
அதற்கும் அடுப்பங்கறை என்று தான்
சொல்வாய்...
இன்று பிறந்த நாளாய்
இருந்தும் சாதரண சேலை தான்
கட்டியிருப்பாய்...
நீ மிளிர்வது என்றால்
எங்களுக்கு மட்டும் அல்ல,
உலகிற்கே..அன்று
திருவிழா வாகத்தான் இருக்கும்...
மெத்தையில் கிடைக்காத
தூக்கத்தின்
சுகத்தை உன் மடியிலும்,
உன் சேலை விரிப்பிலும்
பெறலாம்..
உன் கரம் பிடித்து
நடை பயின்ற காலம்
ஞாபகம் இல்லை மாறாக,
என் கரம் பிடித்து
நீ நடை பயின்ற காலம்
ஞாபகம் இருக்கிறது...
அவ்வளவு அடிபட்டும்
ஒரு துளி வரவில்லை
உன் கண்ணில்
நாங்கள் அழுதிடக் கூடாதென்று...
தாய் என்பதாலோ...
நாங்கள் வரம் பெற்றிருக்கிறோம்
உனக்கு பிள்ளையாய் பிறந்ததற்கு..
பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
அன்பு அம்மாவிற்கு..
அடுப்பங்கறை பூத்தரையில் தான்
சுகமாக தூங்குவாய் நீ..
உலகில் உனக்கு
பிடித்த இடம் எது என்று கேட்டால்
அதற்கும் அடுப்பங்கறை என்று தான்
சொல்வாய்...
இன்று பிறந்த நாளாய்
இருந்தும் சாதரண சேலை தான்
கட்டியிருப்பாய்...
நீ மிளிர்வது என்றால்
எங்களுக்கு மட்டும் அல்ல,
உலகிற்கே..அன்று
திருவிழா வாகத்தான் இருக்கும்...
மெத்தையில் கிடைக்காத
தூக்கத்தின்
சுகத்தை உன் மடியிலும்,
உன் சேலை விரிப்பிலும்
பெறலாம்..
உன் கரம் பிடித்து
நடை பயின்ற காலம்
ஞாபகம் இல்லை மாறாக,
என் கரம் பிடித்து
நீ நடை பயின்ற காலம்
ஞாபகம் இருக்கிறது...
அவ்வளவு அடிபட்டும்
ஒரு துளி வரவில்லை
உன் கண்ணில்
நாங்கள் அழுதிடக் கூடாதென்று...
தாய் என்பதாலோ...
நாங்கள் வரம் பெற்றிருக்கிறோம்
உனக்கு பிள்ளையாய் பிறந்ததற்கு..
பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
அன்பு அம்மாவிற்கு..

No comments:
Post a Comment